நரேந்திர மோடியை சந்திக்க கோரிக்கை விடுத்த எலான் மஸ்க்! காரணம் என்ன?
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகிறது.
டெஸ்லா கார்கள் இந்திய மார்க்கெட்டில் எப்படியாவது வரவேண்டும் என முயற்ச்சி வருகின்றனர். ஆனால் மின்சார கார்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிப்பு காரணமாகவே அந்நிறுவனம் இந்தியாவில் இறக்குமதியை செய்ய முடியாமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், மின்சார வாகனத்தின் வரியை குறைக்க, எலான் மஸ்க் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து வருகிறார். தற்போது, பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு வழங்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், சமீபத்தில் டெஸ்லா நிறுவன அதிகாரிகள் பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தியதாக தகவல்கள் வெளியானது.
இந்த ஆலோசனையில், டெஸ்லா நிறுவன வரி விதிப்பை குறைக்க வேண்டும், என கோரிக்கை கேட்டதற்கு, வரியை குறைக்க முடியாது எனவும், உலகம் முழுக்க பல மின்சார வாகனங்கள் உள்ளன.
உங்களுக்கு மட்டும் வரியை எப்படி குறைக்க முடியும்., நீங்கள் அதற்கு இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்கலாமே என நிர்வாகிகள் டெஸ்லா அதிகாரிகளிடம் கூறியுள்ளது.