சீன சேதனப்பசளையில் காணப்பட்ட ஆபத்து என்ன?

இலங்கைக்கு சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சேதனப்பசளையை சோதனை செய்த வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பெனி (Ceylon Fertilizer Company Limited) அப்பசளைகளில் Bacillus sp , Erwinia sp ஆகிய பாக்டீரியா இனங்கள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Bacillus_sp:
இந்த Bacillus இன Bacteria க்கள் மண்ணில் காணப்படக்கூடியவை. உக்குகின்ற சேதன பொருட்கள், மரக்கறி கழிவுகளில் காணப்படலாம். இதன் ஒரு வகையான Bacillus anthracis என்பது கால்நடைகளை பாதித்து (மாடுகள்) anthrax எனும் mad cow disease ஐ உருவாக்கும். இது கால்நடைகள் ஊடாக (அவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும்போது – cutaneous anthrax) மனிதனுக்கும் பரவும். இவற்றின் இறைச்சியை உண்ணும்போது intestinal anthrax , தூசிகளை சுவாசிக்கும்போது pulmonary anthrax போன்ற குடல், சுவாசப்பகுதி தொற்றுகள் நிகழலாம்.
பொதுவாக இந்த வகை பக்டீரியாக்கள் மண்ணில் நீண்ட காலம் (Dormant) நிலையில் காணப்படும்.

B cereus, B subtilis and B licheniformis போன்ற இனங்களால் உடலில் கிருமி தொற்று (bacteremia/septicemia) நிகழலாம். இதனாலேயே இறக்குமதி செய்யப்படும் தாவர உணவுகள், இறைச்சி வகைகள் , டின் மீன்கள் மற்றும் சேதனப்பசளைகளில் இந்த வகை பாக்டீரியாக்கள் உள்ளனவா என சோதிக்கப்படும்.

02. Erwinia_sp
இந்த வகை பாக்டீரியாக்களில் Erwinia chrysanthemi எனும் இனம் தாவரங்களை பாதிக்கக்கூடியது. (responsible for causing cell death in plant tissue.)
Erwinia amylovora போன்ற இனங்கள் மனிதனுக்கும் நோயை உண்டாக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.