கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் நிலையிலும் நாட்டில் தீவிரமடையும் மற்றுமொரு அச்சுறுத்தல்!!
கேகாலை மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாகவும் இதுவரையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஜுன் மாதத்தில் இருந்து கடந்த 20ஆம் திகதி வரையில் 250க்கும் அதிகமானோர் எலிக்காய்ச்சலுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாவனெல்ல மற்றும் தெஹிஓவிட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எலிக்காயச்சலினால் அதிக அளவிலானோர் பதிவாகியுள்ளனர்.
கொவிட் தொற்று காரணமாக இவ்வாறான காய்ச்சல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் வலி நிவாரணிகளை பயன்படுத்திவிட்டு வைத்தியரிடம் செல்லாமல் வீடுகளிலேயே இருப்பதே இந்த நிலைமைக்கு காரணமாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சைக்காக செல்லுமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்து்ளளது.
மேலும் கேகாலை வைத்தியசாலையில் 38 பேர் வரையில் எலிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வாரமே குறித்த இரண்டு நோயாளிகளும் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் வயலில் வேலை செய்யாதவர் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் நிலையிலும் நாட்டின் பல பகுதிகளில் எலிக்காய்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.