மத்தள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 8 மாதத்தில் 520 இலட்சம் வருமானம்
மத்தள சர்வதேச விமான நிலையத்தை கடந்த நல்லாட்சி அரசாங்கம் நெல் களஞ்சியசாலையாக மாற்றியதன் மூலம் ஐந்து வருட காலத்தில் அதன்மூலம் கிடைக்கவேண்டிய 1,192 இலட்ச ரூபா வருமானம் இழக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கொரோனா வைரஸ் சூழ்நிலையிலும் முதல் எட்டு மாதங்களில் அதன் மூலம் 520 இலட்சம் ரூபா வருமானம் பெற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.
அதற்கிணங்க 2014ஆம் ஆண்டு மத்தல விமான நிலையத்தின் மூலம் பெறப்பட்ட வருமானம் ரூ 1,362 இலட்சம் ரூபாவாகும்.
2019ஆம் ஆண்டு அந்த வருமானம் 170 இலட்சம் ரூபாவாகியது.
2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2015ஆம் ஆண்டில் 50 வீத வருமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் மத்தல விமான நிலையத்தினை பயணிகள் விமான நிலையமாக மாற்றியது.
அதற்கிணங்க நாட்டில் நிலவும் கொரோனா சூழ்நிலைக்கு மத்தியிலும் இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதம் வரை 520 இலட்சம் ரூபா வருமானத்தை பெற்றுக் கொண்டுள்ளது. இது 2019ஆம் வருடத்தோடு ஒப்பிடுகையில் 350 இலட்ச ரூபா அதிக வருமானத்தை காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.