இசைஞானி புதிய ஸ்டுடியோவில் நேற்றைய நிகழ்வில்…
சினேகன், கன்னிகா தம்பதியரை நேரில் அழைத்து இளையராஜா வாழ்த்தியுள்ளார்..
கவிஞரும், நடிகருமான சினேகன்
தனது நீண்ட நாள் காதலியான கன்னிகா ரவியை ஜூலை 29 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். அந்த திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் முன்நின்று நடத்தி வைத்தார்.திருமணத்தில் பாரதிராஜா உள்பட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.
இந்நிலையில் சினேகன் , கன்னிகா திருமணத்தில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துக்கொள்ள முடியாத காரணத்தால், இருவரையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல் சினேகனுக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார்.