அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா முக்கிய தலைவர் பலி!
சிரியாவில் அமெரிக்கா நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் அப்துல் ஹமீது அல் மதார் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அல்-கொய்தா மூத்த தலைவர் கொல்லப்பட்டதன் மூலம் அமெரிக்க குடிமக்கள், எங்கள் கூட்டாளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தும் சர்வதேச அளவிலாள சதி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது பயங்கரவாத அமைப்பின் திறனைச் சீர்குலைக்கும் என அமெரிக்க இராணுவ மேஜர் ஜான் ரிக்ஸ்பீ தெரிவித்துள்ளார்.
சிரியாவில் பாதுகாப்பு பணியில் இருந்த அமெரிக்க படையினர் மீது கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பழி தீர்க்கும் வகையில் வட மேற்கு சிரியாவில் அமெரிக்க படையினர் ஆளில்லா விமானம் மூலம் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அப்துல் ஹமீது அல் மதார் கொல்லப்பட்டார் என மேஜர் ஜான் ரிக்ஸ்பீ கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பரில் சிரியாவின் அல்-கொய்தா முக்கிய தலைவரான சலீம் அபுஅகம்மது கொல்லப்பட்டார். தற்போது மற்றொரு சிரேஷ்ட தலைவர் கொல்லப்பட்டமை அந்த அமைப்புக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.