முதல் போட்டியில் வெற்றிபெறுவது மிகவும் முக்கியம் – தசுன் ஷானகா!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய இலங்கை அணி சரித் அசலங்கா, பனுகா ராஜபக்ஷ ஆகியோரது அதிரடியான அரைசதத்தினால் 18.5 ஓவர்களிலேயெ இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
இந்நிலையில், தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெறுவது மிகவும் முக்கியமானது என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷனகா, “நாங்கள் சேஸ் செய்தது எளிதான இலக்கு அல்ல. அனால் பேட்ஸ்மேன்கள் சரியாக செயல்பட்டால் எந்த இலக்கையும் சரியாக சேஸ் செய்ய முடியும். எப்போதும் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெறுவது மிகவும் முக்கியமானது. அதனை நாங்கள் இன்று செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.