பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம் – ஜோசப் ஸ்டாலின்.
அதிபர் , ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கும் அதேவேளை புதிய முறைமையில் இனி தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம். சகல மாணவர்களுக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் என்ற ரீதியில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் மாத்திரமே பாடசாலை சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாத்திரமே கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவர். அதனை தவிர்த்து வேறு எந்த கல்வி சார் செயற்பாடுகளிலும் ஈடுபடப் போவதில்லை.
வெவ்வேறு பிரதேசங்களிலுள்ள ஆசிரியர்களுக்கு பாடசாலை செல்வதற்கான சூழல் இல்லை. காரணம் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படாமையாகும்.
எனவே அரசாங்கம் மாகாணங்களுக்கிடையில் பாடசாலை செல்லும் ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கும் அதேவேளை புதிய முறைமையில் இனி தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
சகல மாணவர்களுக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.