அங்கொட லொக்காவின் சகா சுட்டுப் படுகொலை!

அங்கொட, முல்லேரியா பகுதியில் இன்று அதிகாலை 34 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பாதாளக் குழுத் தலைவர் அங்கொட லொக்காவின் சகா ஒருவராலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரும் பாதாளக் குழுவுடன் தொடர்புபட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவரும் அங்கொட லொக்காவுக்கு நெருக்கமானவர் எனவும், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ‘இத்தாலி சமிந்த’ என்பவருக்கும் நெருக்கமானவர் எனவும் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபரே வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.