நிருபமா விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
பண்டோரா ஆவண சர்ச்சையில் அவரும் அவரது கணவரான தொழிலதிபர் திருக்குமார் நடேசனும் சிக்கியுள்ளனர்.
தொழிலதிபர் திருக்குமார் நடேசனிடம் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே நிருபமா ராஜபக்சவுக்கும் ஆணைக்குழு விசாரணைக்கான அழைப்பை விடுத்திருப்பதாக தெரியவருவதோடு விசாரணைத் திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.