இரவு நேர பயண கட்டுப்பாடுகள் நீக்கம்.

கொவிட் பரவல் காரணமாக நாடு பூராகவும் நடைமுறையில் இருந்த இரவு நேர பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நடைமுறையில் இருந்த பயணக் கட்டுப்பாடு இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவோரின் எண்ணிக்கை மற்றும் திருமணங்கள் மீதான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. மண்டபங்களுக்கு உள்ளே நடைபெறும் திருமணங்களில் 100 பேரும், வெளிப்புற திருமணங்களில் 150 விருந்தினர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.