இரசாயன உரங்கள் எதிர்காலத்தில் நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்படும்- ஹர்ஷ டி சில்வா.
இரசாயன உரம் தொடர்பான அரசாங்கத்தின் கடுமையான தீர்மானத்தை மாற்றாவிட்டால்அது எதிர் காலத்தில் நாட்டில் பல நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இரசாயன உரம் தொடர்பான அரசாங்கத்தின் கடுமை யான தீர்மானத்தை மாற்றாவிடில் எதிர்காலத்தில் பாரி விளைவை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என தேசிய விஞ்ஞான அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
நெல் அறுவடை 30-35 வீதமும், தேயிலை, சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மலையக மரக்கறிகள் 50 வீதமும், கரும்பு 40 சதவீதம், கறுவப்பட்டை 25 சதவீதம் மற்றும் பூக்கள் 100 சதவீதமும் அறுவடை குறையும் பட்சத்தில் விவசாய வருமானமும் குறைவடைந்து கிராமிய பொருளாதாரத்தைப் பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கிராமிய பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் கிராமத்தில் வறுமை நிலைமை அதிகரிக்கும் என்றும், கிராமத்து மக்கள் வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வருவார்கள் என்றும், இது நகரங்களில் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப் பட்டால் இறக்குமதியில் மோசடி ஏற்பட்டு நாட்டில் கருப்புச் சந்தைக்கு வழிவகுக்கும், மேலும் ஏகபோகத்தை உருவாக்கும், இதன் விளைவாக பெரும் நெருக்கடி ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக விவசாய அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய பல நிபுணர்கள் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்கள் என்றும் தற்போதைய நிர்வாகம் விஞ்ஞானம் தொடர்பான கட்டுக்கதைகளை நம்புவதாகவும், இதன் விளைவாக . கொரோனா தொற்று காரணமாக நாட்டில் 13,000 பேர் பலிகொடுக்கப் பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.