ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் பெரியவருக்கு இடமாற்றம் (வீடியோ)
நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சபரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவரை பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் மருத்துவப் பொருட்கள் மற்றும் நலன்புரி பிரிவுக்கு இடமாற்றம் செய்ய ஐஜிபி உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.எஸ். பி. எம். குணரத்ன , அவரது இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.