டி20 உலகக்கோப்பை விண்டீஸை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா.
டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி எவின் லூயிஸ், கீரன் பொல்லார்ட் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக எவின் லூயிஸ் 56 ரன்களையும், பொல்லார்ட் 26 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளையும், கேசவ் மஹாராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரீசா ஹெண்ட்ரிக்ஸ் – வென்டர் டூசென் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ஹென்ரிக்ஸ் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தார். அதன் மூலம் 35 பந்துகளில் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
இதன் மூலம் 18.2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.