முல்லைப் பெரியாறு அணை: கேரள வதந்திகளுக்கு தமிழக அரசு பதில்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்து கேரளத்தில் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
கேரளத்தில் பிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரிடையேயும் முல்லைப் பெரியாறு அணை குறித்து வதந்திகள் பரப்புவது கவலை அளிக்கக் கூடியது என உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையில் தமிழக அரசு வாதம் முன்வைத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 141 அடிக்கு மேல் உயர்த்தினாலும் அணை பாதுகாப்பாகவே இருக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன.
இது தொடர்பாக நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது; மேலும் அணையை திவிரமாக கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைப்பது குறித்து கேரள அரசு உறுதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு வாதம் முன்வைத்தது.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அணையின் நீர் அளவு அபாய கட்டத்தில் இல்லாதபோது தற்போது இதைப்பற்றிபேச அவசியமென்ன? என கேள்வி எழுப்பியது.