மரண வீட்டில் கலந்துகொண்ட 35 பேருக்குக் கொரோனா!

கம்பஹா, மினுவாங்கொடை ஹோரம்பெல்ல நவலோக பிரதேசத்தில், வைத்தியசாலை ஊழியர் ஒருவரின் மரண வீட்டில் கலந்துகொண்ட 35 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுப்படுத்தப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது.
மரண வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வாரத்துக்குப் பின்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மரண வீட்டில் பங்கேற்றவர்களில் சிலருக்குத் தொண்டை நோவு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து மரண வீட்டில் பங்கேற்றவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 35 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மரண வீட்டுக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்து பலர் வருகை தந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
எனவே, இந்த மரண வீட்டில் பங்கேற்றவர்களின் விவரங்களைச் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திரட்டி வருகின்றனர்.