24 மணிநேரத்தில் 21 பேர் சிக்கினர்!
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 417 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 பிரதேசங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 1,248 வாகனங்களில் பயணித்த 616 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோன்று மேல் மாகாணத்துக்கு உள்நுழைய முற்பட்ட 1,405 வாகனங்களில் பயணித்த 774 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி மேல் மாகாணத்துக்கு உள்நுழைய மற்றும் வெளியேற முற்பட்ட 128 வாகனங்கள் 201 பேருடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.