பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்…
கனடா நாட்டின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதன்படி ,கனடாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்ற நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமர் ஆனார். இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவையில் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி இந்திய வம்சாவளியை சேர்ந்த 54 வயதான அனிதா ஆனந்த் என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அனிதா ஆனந்தின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
மேலும் ,லிபரல் கட்சி சார்பில் oakville தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் 46சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கு முன்னதாக கனடாவின் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறையின் அமைச்சராக அனிதா ஆனந்த் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.