நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்ற வீரரை அரசாங்க அதிபர் கௌரவித்தார்!

நீர்நிலைகள் பிறர் உயிர்காப்பு(Life Guard) தொடர் பயிற்சியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற கனகரட்னம் நிறோஜன் அவர்களை மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் பாராட்டி பதக்கம் அணிவித்து கௌரவித்துள்ளார்.
குறித்த நிகழ்வு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவினரின் அனுசரணையில் இன்று(28) காலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த சாதனையாளரின் வெற்றி அனுபவங்கள் மற்றும் துறைசார் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
சர்வதேச தரத்திற்கமைவான (Level 1,2,3) 21 நாட்கள் கொண்டதான நீர்நிலைகள் பிறர் உயிர்காப்பு(Life Guard) தொடர் பயிற்சிகள் கடந்த 07/10/2021ம் திகதி தொடக்கம் நேற்று (27) வரையான காலப்பகுதியில் யாழ்/காரைநகரில் இடம்பெற்றுள்ளது.
இப் பயிற்சியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச திம்பிலி கிராம லக்கிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த கனகரட்னம் நிறோஜன் அவர்கள் கலந்து கொண்டு முதல் நிலையை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின்
ஒழுங்குபடுத்தப்பட்ட குறித்த பயிற்சியில் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பிரிவினரால் மாவட்ட உள்ளூர் வீரர்களை ஒழுங்குபடுத்தியதாக ஏனையவர்களுக்கான உயிர்காப்புடன் நீச்சல் பயிற்சி மேம்படுத்தலுக்காக மேலும் பல வீரர்கள் எதிர்காலத்தில் இப் பயிற்சியினை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.