நான்கு வழிப் பாதையாக அபிவிருத்தி செய்யும் பணியின் அங்குரார்ப்பண நிகழ்வு…
கண்டி ஹீரஸ்ஸகல சந்தியிலிருந்து கண்டி புகையிரத நிலையம் வரையான வீதியை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்யும் பணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் இடம்பெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் 1290.5 மில்லியன் ரூபா செலவில் இந்த வீதி அபிவிருத்தி செய்யப்படுகிறது. இந்த வீதியின் நீளம் 2.1 கி.மீ களாகும்.
இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, திலும் அமுனுகம, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.