குடும்பஸ்தர் இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்பு!

கொழும்பு, பிலியந்தலை தும்போவில பிரதேசத்திலுள்ள வீடொன்றில், தனிமையில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர், இன்று காலை இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பிலியந்தலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரத் தந்தநாராயன என்ற 60 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
குறித்த நபரின் தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்பட்டதால் அவருடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர், அவரது வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்துப் பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் பல்வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.