முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கொரோனா சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 1696 ஆவது நாளாகத் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “எங்கே எங்கே உறவுகள் எங்கே?”, “குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து!”, “வேண்டும் நீதி வேண்டும்”, “சர்வதேசமே பதில் சொல்” என்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தங்கியவாறும் பங்கேற்றனர்.