மாரடைப்பு காரணமாக சூப்பர் ஸ்டார் உயிரிழப்பு.

மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பெங்களூர் விக்ரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் புனித் ராஜ்குமார் காலை 11.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு அழைத்து வரும்போதே அவரது உடல்நிலை மோசமாக இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், நடிகர் புனித் ராஜ்குமார் உயிரிழந்துள்ளார்.