மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலுக்கு சேர்க்க நடவடிக்கை.

கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம் செலுத்த தவறியதை அடுத்து, இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலுக்கு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தினால் கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கி, இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவின் இந்த தீர்மானம், வர்த்தக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. சீன தூதரகத்தின் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் வங்கி விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி, கடன் நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக மக்கள் வங்கியை கருப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.