பாடசாலை ஆரம்பம் குறித்து வெளியான புதிய தகவல்.

மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 31ம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதேவேளை, அரச பாடசாலைகளின் கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் கல்வி பொது தராதர உயர் தர வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, குறித்த வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக திகதியை கல்வி அமைச்சு தீர்மானிக்கும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.