பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டது.
இழப்பீடுகள் நேரடியாக வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு காப்பீட்டாளர்களிடமிருந்து நிவாரணமாக வந்து ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே. மீனவர்களின் நலன் கருதி பெறப்பட்ட தொகையானது மீன சமூகத்துக்கு உடனே நிவாரணமாக வழங்க அரசாங்கம் முடிவு செய்தது.
மேலும் இதற்காக மீன்பிடித் துறைக்கு ஒதுக்கப்பட்ட 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை எக்ஸ்பிரஸ் பேர்ல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு விநியோகிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யபட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் நேரடி கண்காணிப்பில் இலங்கை ரூபா மதிப்பின்படி 420 மில்லியன் ரூபாக்களை இவ்வாறு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. எக்ஸ்பிரஸ் பேர்ல் தொடர்பான பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு முதல் கட்டமான இழப்பீடு இதுவாகும்.
இதேவேளை படகு உரிமையாளர்கள் தீர்க்கப்படாத சில பிரச்சனைகள் காரணமாக வழங்கப்படாத மீதிப் பணம் எதிர்வரும் காலங்களில் அடுத்தகட்ட இழப்பீடு வழங்கும் போதும் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.