கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 22 பேர் உயிரிழப்பு.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 22 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித் துள்ளது.
நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 09 ஆண்களும், 13 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்தவகையில் 30 வயதுக் குட்பட்ட வர்களில் பெண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 3 ஆண் களும், 3 பெண்களுமாக 6 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 6 ஆண் களும் 9 பெண்களுமாக 15 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 696 ஆக உயர்வடைந் துள்ளது.