நியூசிலாந்து உயர்ஸ்தானிகரை சந்தித்த சாணக்கியன்.

நியூசிலாந்தில் சிறுபான்மையினருக்கான உரிமை சமமாக வழங்குவதை போன்று இங்கும் வழங்கப்பட வேண்டும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவிப்பு
இன்றைய தினம் நியூசிலாந்து நாட்டின் உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லட்டன் Michael Appleton அவர்களை இலங்கைக்கான நியூசிலாந்து தூதரகத்தில் வைத்து உத்தியோக பூர்வமாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த இரா.சாணக்கியன்.
நியூசிலாந்து நாடானது எமது நாட்டைப் போன்றே அங்கும் சிறுபான்மை மற்றும் ஆதி குடியிருப்புக்களை கொண்ட நாடாகும் ஆனால் அங்கு அவர்களுக்குரிய சம உரிமை அந்நாட்டு பிரதமரினால் வழங்கப்படுகின்றது. அந் நாட்டு பிரதமர் எம்மைப் போன்ற நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கின்றார்.
இன்றைய சந்திப்பின் போது எமது நாட்டில் அரசியல் நிலைமைகள் பற்றியும் சிறுபான்மை சமுகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் கலந்துரையாடி இருந்தேன்.
மேற்கொண்டு மிக முக்கியமாக எமது நாட்டின் அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்லும் உல்லாசத்துறை, தொழில்நுட்பத்துறை போன்றவற்றின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றியும் மற்றும் சூரிய ஒளி மூலமான சக்தியினை எதிர்காலத்தில் எவ்வாறு வினைத்திறனாக உபயோகிப்பது என்பது பற்றியும் கலந்துரையாடி இருந்தேன்.
அத்துடன் எமது பிரதேசங்களில் காணப்படும் காணி அபகரிப்பு மற்றும் வள சுரண்டல்கள் பற்றியும் அதிலும் குறிப்பாக சட்டவிரோத மண் அகழ்வு பற்றிய தொகுக்கப்பட்ட ஆவணம் ஒன்றையும் சமர்ப்பித்ததோடு அதற்க்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய அழுத்தங்களை அரசுக்கு வழங்குமாறு கோரியிருந்தார்.
மற்றும் நியூசிலாந்து நாட்டிற்கான உயர்ஸ்தானிகர் எதிர்காலத்தில் மட்டக்களப்பிற்கு விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோளை முன்வைத்ததாகத் தெரிவித்தார்.