போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவான குற்றவாளி சென்னையில் பதுங்கியிருந்தபோது பிடிப்பட்டார்
ஒடிசா மாநில காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவான குற்றவாளி சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் கைது செய்து ஒடிசா காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டம் பல்லஹராகாவல்துறையினர் தமிழ்நாடு சென்னை புது வண்ணாரப்பேட்டை காவல் துறையிடம் 2017ம் ஆண்டு போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவான சஞ்சய்குமார் பாண்டா என்ற குற்றவாளி சென்னை புதுவண்ணாரப்பேட்டை பதுங்கியிருப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில் ஒடிசா மாநில காவல் தனிப்படையினர் மற்றும் புது வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் ஒன்றிணைந்து குற்றவாளி தொடர்பாக தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டிருந்த நிலையில் செல்போன் எண்ணை வைத்து இருப்பிடத்தை அறிந்து தலைமறைவான குற்றவாளி சஞ்சய்குமார் பாண்டா (எ) சஞ்ஜீப் (எ) பைனா வயது 28 என்பவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
காவல்துறை விசாரணையில் குற்றவாளி சஞ்சய்குமார் பாண்டா 2017ம் ஆண்டு ஒடிசா மாநிலம், பல்லஹரா காவல் நிலைய போக்சோ வழக்கில்சம்பந்தப்பட்டு தலைமறைவாகி கடந்த ஆண்டுகளாக புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லையில் உள்ள ஒரு அரிசி மண்டியில் தங்கி வேலை செய்து வந்தது தெரியவந்தது. ஒடிசா மாநிலம் பல்லஹரா காவல்துறை தனிப்படையினர் கைது செய்யப்பட்ட குற்றவாளி சஞ்சய்குமார் பாண்டாவை உரிய சட்ட நடவடிக்கைகளின்படி ஒடிசா மாநிலம் அழைத்து சென்றனர்.