கேரளத்தில் மழை நீடிப்பு: 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை

கேரளத்தின் தென்மாவட்டங்களில் பெய்துவரும் பரவலான மழை வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், அங்கு மிக பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சூா், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. இங்கு பலத்த மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொல்லம் மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக புனலூா்-தென்மலை பகுதியில் பல வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. தொடா் மழையால் சாலைகளும் பல இடங்களில் சேதமடைந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.