கந்த சஷ்டி விரதத்தின் அற்புதம்.

“சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்”என்பது நம்மிடையே புழங்கும் பழமொழி இந்த பழமொழியின் அர்த்தம் நமக்கு உணர்த்தப்பட்டியிருக்கும் ஆனால் இந்த பழமொழி..,
“சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்”என்ற பழமொழியில் இருந்த மருவியது அதாவது “சஷ்டியில் விரதம் இருந்தால்,கந்தனின் அருளால் புத்திரம் பாக்கியம் இல்லாதவர்களுக்கு அகப்பையில்(கர்ப்ப பையில்) குழந்தை உருவாகும் என்பதுதான் உண்மையான அர்த்தம்.
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் தீபாவளிக்கு மறுநாளிலிருந்து கந்த சஷ்டி ஆரம்பம் என சொல்லப்பட்டாலும் சில நேரங்களில் தீபாவளி அமாவாசைக்கு முன்னாடியே வந்துவிடுவதால் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு பிரதமை திதியில் இருந்து சஷ்டி திதி வரை உள்ள காலமே கந்த சஷ்டி விரத காலம் என நாம் அறிந்துகொள்ளலாம்.
விரதம் இருக்கும் முறை.
ஒவ்வொரு நாளும் அதிகாலை குளித்துவிட்டு முருக பெருமானை வணங்கிவிட்டு பின் மாலையில் முருகனுக்கு அகல் விளக்கேற்றி வைத்து கந்த சஷ்டியையோ அல்லது கந்த குரு கவசத்தையோ பாராயணம் செய்வது சிறப்பாகும்.
மாலை ஒரு வேலை சாப்பிடலாம் வயதானவர்கள்,நோயாளிகள் தன் உடல்நிலக்கு ஏற்ப உணவை எடுத்து கொள்ளலாம்
இந்த விரதம் வரும் நவம்பர் 05-11-2021 முதல் 11-11-2021 வரை இருக்க வேண்டும்!
10-11-2021 கந்த சஷ்டி,சூரசம்ஹாரமாகும்!
இந்த விரதம் மிக அற்புதமான பலனை கொடுக்கக்கூடியது அனைவரும் விரதம் அனுசரித்து திருச்செந்தூர் முருகனின் அருளை பெறுக!