லாசித் மலிங்காவின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த ரஷீத் கான்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12-சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் ஏற்கனவே சில வீரர்கள் சில முக்கியமான சாதனைகளை படைத்து வரும் நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதன்படி நேற்றைய லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்களை மட்டுமே எடுக்க 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. இறுதியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாச படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் ரஷீத் கான் படைத்த சாதனை யாதெனில் இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரஷித் கான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 53 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் .
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதுவும் வெறும் 23 வயதில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக மலிங்கா 76 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
இந்நிலையில் மலிங்காவின் அந்த சாதனையை தற்போது ரஷீத் கான் முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் அவர் 4 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.