முன்னாள் கல்விப் பணிப்பாளர் செல்வரத்தினம் காலமானார்!
முன்னாள் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளரும் வடமராட்சி, யாழ்ப்பாணம் ஆகிய வலயங்களின் முன்னாள் கல்விப்பணிப்பாளரும் ஜி.ஐ. இசற்றின் முன்னாள் பணிப்பாளருமான வே.தி.செல்வரத்தினம் தனது 73 ஆவது வயதில் காலமானார்.
வல்வெட்டியைச் சேர்ந்த இவர் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக தனது அரச பணியை ஆரம்பித்து இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் வகுப்பு உத்தியோகத்தராக உயர்வு பெற்றவர்.
இடர் மிகுந்த காலத்தில் யாழ். குடாநாட்டின் கல்வியை தளர்ந்து விடாமல் பேணியமையில் இவரது பங்கு அளப்பரியது என்று கல்வியாளர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.