மண் சரிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாப மரணம்!

பதுளை, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்பே தோட்டம் பகுதியில், வீதியின் மீது மண்சரிந்து விழுந்தில், வீதியில் பயணித்த 29 வயது நபர் மரணமடைந்தார்.
திவுல்கஸ்தென்ன, ஹேலஹல்பே பிரதேசத்தை சேர்ந்த 29 வயது நபரே இவ்வாறு மரணமடைந்தார்.
சடலமானது, வீதியிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலுள்ள நீர்நிலையிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.