நாடளாவிய ரீதியில் சேதன பசளை விநியோகம்….

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (01) சேதனைப் பசளை விநியோகிக்கப்படும் என கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான சேதனைப் பசளை நேற்று (29) முதல் விநியோகிக்கப்படுவதாக கமநல சேவைகள் பணிப்பாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன குறிப்பிட்டார்.
இதன்கீழ், K.C.L. திரவ உரம் மற்றும் நெனோ நைட்ரஜன் உரம் ஆகியன விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.