என்னால் அமைச்சு பதவியில் இருக்க முடியாது.. ஞானசார தேரரின் பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்த அலி சப்ரி

ஒரே சட்டம் என்ற கருத்தை முன்னெடுப்பதற்காக ஒரு நாடு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பதவிக்கு வண.கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நியமனம் அனைத்து சமூகத்தினரின் நியாயமான நடத்தைக்கும் இடையூறாக உள்ளது என்பது அமைச்சரின் கருத்தாகும்.
முஸ்லிம் சமூகத்தின் முஸ்லிம் தலைவர்களான மௌலவிகள் அமைச்சரிடம் தங்களது கடும் எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து அவர் தனது எதிர்ப்பை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த செயலணி தொடர்ந்தும் செயற்பட்டால் இனி நீதி அமைச்சராக பதவி வகிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த வியாழன் அன்று நடைபெற்ற கட்சித் தலைமைக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் பலர் இந்த நியமனத்திற்கு தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
– தேசய