பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ளாத பிரித்தானிய மகாராணி.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என அரண்மனை அறிவித்துள்ளது.
95 வயதான பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத், கடந்த வாரம் வழக்கமான சோதனைகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், வைத்தியர்களின் பரிந்துரைக்கு அமைவாக அவர் மேலும் 02 வாரங்களுக்கு ஓய்வில் இருக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.