மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்.

இலங்கையில் கணிசமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் தரப்பினர், படைத்தரப்பினர் உட்பட்ட முன்வரிசை செயற்பாட்டாளர்களுக்கு நாளை முதல் 03ஆவது தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வெளியிட்டுள்ளார்.
மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் பணி நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன்போது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்’று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்காக ஆரம்பிப்பதற்காக ஒரு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், வாரந்தோறும் 400,000 தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.