அரசைவிட்டு வெளியே வாருங்கள்! – அதிருப்தியாளர்களுக்கு வெல்கம அழைப்பு.
“அரசில் இருக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்கள் கூறுவது போல், யுகதனவி உடன்படிக்கை தொடர்பான பிரச்சினை குறித்து தாம் கூறுவதை அரசின் தலைவர்கள் செவிமடுப்பதில்லை என்றால், அரசுக்குள் இருந்து கோஷமிடாது வெளியேற வேண்டியதையே சிறிய கட்சிகளின் தலைவர்கள் செய்ய வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசின் தீர்மானங்களை அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதில் இருப்போருக்குத் தெளிவுபடுத்துவதில்லை என்றால், அவர்கள் கூறுவதைக் கேட்பதில்லை என்றால், அதற்குள் இருக்காமல் வெளியில் வாருங்கள். உள்ளே இருந்து கத்திக்கொண்டிருக்காமல் வெளியே வாருங்கள்.
அமைச்சுப் பதவிகள் மிகப் பெரிய விடயங்களா? அமைச்சுப் பதவிகள் என்றும் நிலைத்திருக்குமா? இல்லை. மக்களுக்காக வீதியில் இறங்கி குரல் கொடுக்க அமைச்சுப் பதவிகள் தேவையில்லை.
மக்களுக்காக வேலைகளைச் செய்ய அமைச்சுப் பதவிகளோ, அரச அதிகாரமோ தேவையில்லை. வெளியில் வந்தால், நாம் அனைவரும் இணைந்து, குரல் எழுப்பி நாட்டைச் சிறந்த இடத்துக்குக் கொண்டு வர முடியும்” – என்றார்.