பிரான்ஸில் இருந்து பல வருடங்களின் பின் ஶ்ரீலங்கன் நேரடி விமான சேவை ஆரம்பமானது

பிரான்ஸில் இருந்து 6 வருடங்களுக்கு பின்னர் முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது.
அதன்படி, ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 200 பயணிகளுடன் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் 6 வருடங்களுக்கு பின்னர் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 563 நேற்று அதிகாலை 1 மணிக்கு பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸின் பாரிஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையத்திற்கு சென்றது.
இதேநேரம், ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து Paris Charles De Gaulle விமான நிலையத்திற்கு செல்லும் என்றும் அதே நாளில் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு மற்றொரு ஸ்ரீலங்கன் விமானம் வரவுள்ளதாகவும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
1980களில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2015 இல், இந்த நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.