ஸ்காட்லாந் கிளாஸ்கோவ்வில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக கோஷம்… (போட்டோ / வீடியோ)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருப்பதாகக் கூறப்படும் ஸ்கொட்லாந்தின் டன்பிளேன் நகரில் உள்ள டபுள் ட்ரீ ஹோட்டலுக்கு வெளியே பல போராட்டக்காரர்கள் திரண்டிருந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அதன்படி ,இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்காக ஜனாதிபதி தேடப்பட்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“நிறுத்து, இனப்படுகொலையை நிறுத்து, இலங்கை ஜனாதிபதி இனப்படுகொலைக்காக தேடப்படுகிறார்” என்று போராட்டக்காரர்கள் கோஷமிடுவதை காட்சிகளில் காணமுடிகிறது.
மேலும் ,ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு ஜனாதிபதி விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.