கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சதம் விளாசல் .ஜோஸ் பட்லர்.
நடப்பு டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 163 ரன்களை எடுத்துள்ளது.
அந்த அணி ரன் குவிக்க தனி ஒருவராக உதவியுள்ளார் ஜாஸ் பட்லர். 67 பந்துகளில் 101 ரன்களை எடுத்தார் அவர். இன்னிங்ஸின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து சதம் விளாசினார் அவர். இது நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சதமாக அமைந்துள்ளது. அதோடு டி20 கிரிக்கெட்டில் பட்லரின் அதிகபட்ச ரன்களாகவும் இது அமைந்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணிக்கு இந்த ஆட்டத்தில் உயிர் கொடுத்தது பட்லரின் ஆட்டம் தான். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அவர் இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். சமீரா ஒரு விக்கெட் கைபற்றி இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற இலங்கை 164 ரன்கள் எடுக்க வேண்டும்.