கனமழை எதிரொலி.. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் ஆறு போல் ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று தொடங்கிய நிலையில் பள்ளி வளாகங்களிலும் தண்ணீர் தேங்கியதால் கடலூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். அதேப்போல் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று (02.11.2021)ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் த.மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.