அதிமுகவின் செயலாளராக தீபாவாளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா: கலக்கத்தில் முக்கிய புள்ளிகள்
அதிமுக செயலாளராக சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டிருப்பது, மீண்டும் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு தமிழகம் திரும்பிய சசிகலாவை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஏற்கவில்லை. இதனால் சட்டசபை தேர்தலில் சசிகலா யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார்.
இருப்பினும் அவ்வப்போது கட்சியில் உள்ளவர்களிடம் பேசுவது தொடர்பான ஆடியோக்கள் வெளிவந்து கொண்டிருந்தன. சட்டசபை தேர்தலுக்கு பின் அதிமுக படு தோல்வியை சந்தித்ததால், கட்சியில் பிளவு ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சசிகலா தற்போது அதிமுகவின் செயலாளராக தீபாவாளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு, சசிகலா இப்படி திடீரென்று அதிமுகவின் செயலாளராக அறிவித்திருப்பது, அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.