வாகனங்களை அவதானமாக செலுத்த உத்தரவு.

மலையகத்தின் பிரதான வீதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் சாரதிகள் கவனத்துடன் வாகனங்களை செலுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா தலவாக்கலை பிரதான பாதை,நுவரெலியா கண்டி பிரதான பாதை, நுவரெலியா ஹய்பொரஸ்ட் உடப்புஸ்ஸலாவை பிரதான வீதிகளில் அதிகாலை நேரத்தில் அதிகமாக பனிமூட்டம் காணப்படுகிறது
அத்துடன் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் பிறமாவட்டங்களில் இருந்து நுவரெலியா வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதானமாக நானுஓயா ரதல்ல குறுக்கு பாதையில் வாகனங்களை செலுத்துமாறும், இதனால் இப்பாதையில் ஏற்படும் வாகன விபத்துகளை குறைத்துக் கொள்ள முடியும் எனவும்
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் கவணமாக வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரிகள் வாகன சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.