கேல் ரத்னா விருது: நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு அறிவிப்பு!

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மிதாலி ராஜ், இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் உள்ளிட்ட 12 வீரர்களுக்கு, கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு மத்திய அரசு சார்பில் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா உள்ளிட்ட விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். இதன்படி நடப்பு 2021 ஆம் ஆண்டுக்கான தயான் சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஒலிம்பிக் தடகள வரலாற்றில் சாதித்து, முதன் முறையாக இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா,டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவிக்குமார் (மல்யுத்தம், வெள்ளி), லவ்லினா (குத்துச் சண்டை, வெண்கலம்), பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹரா, மணிஷ் நார்வல் (துப்பாக்கிச் சுடுதல்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), பிரமோத், கிருஷ்ணா (பேட்மின்டன்), கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், (ஹாக்கி), இந்திய பெண்கள் ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், சுனில் செத்ரி, (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி)சேர்த்து 12 பேர் ‘கேல் ரத்னா’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில் விருது வழங்கப்படும்.

41 ஆண்டுக்குப் பின் ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்கள், கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற பவினா படேல் (டேபிள் டென்னிஸ், வெள்ளி), சுஹாஸ் (வெள்ளி, பேட்மின்டன்) உட்பட 35 வீரர், வீராங்கனைகள் அர்ஜுனா விருது பெற உள்ளனர். சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.