சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 1ம் திகதி சீமான் தலைமையில் சேலம் அம்மாப்பேட்டையில் தமிழ்நாடு நாள் விழா வெகு விமர்சியாக கொண்டாட்டப்பட்டது.
இந்த விழாவில் சீமான் தமிழ்நாடு கொடியை ஏற்றி வைத்து உறுதி மொழியேற்றார். இதைத்தொடர்ந்து தொடர் கருத்தரங்கங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழ்நாடு கொடி ஏற்றிய சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சேலம் அம்மாப்பேட்டை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் ராஜா அளித்த புகாரின் பேரில் சேலம் அம்மாப்பேட்டை காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு ஜூலை 18 ஆம் திகதியை தமிழ்நாடு நாள் என கொண்டாடுவோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அறிவித்துள்ளார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியனர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.