சௌபாக்கியா வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை விதைப்பொதிகள் கையளிப்பு.
யாழ்.மாவட்டத்தில் சௌபாக்கிய நிலைபேறான வீட்டுத்தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வளமான வீட்டுத்தோட்ட வாரத்தின் (01.11.2021 – 07.11.2021) ஆரம்ப நிகழ்வு திங்கட்கிழமை (01.11.2021) கரவெட்டி கமநல திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய “ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வீட்டுத் தோட்டம்” எனும் தொனிப்பொருளின்கீழ் விவசாய அமைச்சினால் நாட்டில் 1.2 மில்லியன் வீட்டுத்தோட்டங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், சௌபாக்கியா வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வாரம் நவம்பர் 1ஆந் திகதி தொடக்கம் 7ஆந் திகதிவரை கடைப்பிடிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் மற்றும் மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர், வடமாகாண கமநல பிரதி பணிப்பாளர் , மாவட்ட உதவி ஆணையாளர் , மாவட்ட பிரதி ஆணையாளர்;, கரவெட்டி பிரதேச செயலாளர், கரவெட்டி கமநல உத்தியோகத்தர், மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் இணைப்பாளர், பிரதேசசபை உறுப்பினர் ஆகியோர் கலந்து சிறப்பித்து பயனாளிகளுக்கு விதைப்பைக்கற்றுக்கள் வழங்கி வைத்தனர்.