முதல் வெற்றி மூலம் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை பெறுமா?
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது இந்தியா
டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 210 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 74 ரன்களையும், கேஎல் ராகுல் 69 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து கடின இலக்கை நோக்கி ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது.
ஆனால் அந்த அணியின் பேட்டிங்கில் தூண்களாக இருந்த ஹஸ்ரதுல்லா ஸஸாய், முகமது ஷசாத், ரஹ்மனுல்ல குர்பாஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்து வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் முகமது ஷமி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.