14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.. கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…
லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலையில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம் கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தீபாவளி அன்றும் டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, நீலகிரியில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
கேரளா, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.